நீட் தேர்வு விவகாரத்தில் முதல்வர் நல்ல முடிவுகளை அறிவிப்பார் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் தற்போது கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் பல்வேறு இடங்கள் மழையால் பாதிக்கப்பட்டு, வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் உயிர் இழப்புகளை சந்தித்து வருகிறது.
இதற்காக நிவாரணங்களை வழங்கும் பணி ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் வைத்து நடந்தது. இந்த பணியின்போது தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்களும் கலந்துகொண்டு நிவாரணங்கள் ஏற்றிச்சென்ற வாகனங்களை அனுப்பி வைத்தார்.
அதன் பிறகு ,செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தெலுங்கானா மாநிலத்துக்கு தமிழக முதல்வர் அவர்களால் நிவாரண பொருட்கள் வழங்கப்படும் எனவும், ஆசிரியர் தகுதி தேர்வு சான்றிதழ் குறித்து முதல்வர் பிரதமருக்கு கடிதம் அனுப்பி உள்ளதாகவும் இதன் மூலம் ஆயுள்காலம் முழுவதும் அச்சான்றிதழை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாகவும் கூறிய அவர், நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடையக் கூடிய வகையில் விரைவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் நல்ல முடிவுகளை அறிவிப்பார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
டெல்லி : இன்று மறைந்த முன்னாள் இந்திய பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாயின் 100வது பிறந்தநாள்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கடந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அம்பேத்கர் குறித்து பேசுகையில், அம்பேத்கர் குறித்து…
குஜராத்: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 ஒருநாள் போட்டிகள்…
பிரான்ஸ்: பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தின் முதல் மற்றும் இரண்டாவது தளங்களுக்கு இடையில் லிஃப்ட் தண்டுகளில் தீ விபத்து ஏற்பட்டது.…
சென்னை: இயேசு கிறிஸ்து பிறப்பே கிறிஸ்துமஸாக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் டிச.25ஆம் தேதி கிறிஸ்தவர்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.…
தூத்துக்குடி: இயேசு கிறிஸ்து பிறப்பே கிறிஸ்துமஸாக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் டிச.25ஆம் தேதி கிறிஸ்தவர்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.…