நீட் தேர்வு விவகாரத்தில் முதல்வர் நல்ல முடிவுகளை அறிவிப்பார் – அமைச்சர் செங்கோட்டையன்!

Default Image

நீட் தேர்வு விவகாரத்தில் முதல்வர் நல்ல முடிவுகளை அறிவிப்பார் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் தற்போது கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் பல்வேறு இடங்கள் மழையால் பாதிக்கப்பட்டு, வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் உயிர் இழப்புகளை சந்தித்து வருகிறது.

இதற்காக நிவாரணங்களை வழங்கும் பணி ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் வைத்து நடந்தது. இந்த பணியின்போது தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்களும் கலந்துகொண்டு நிவாரணங்கள் ஏற்றிச்சென்ற வாகனங்களை அனுப்பி வைத்தார்.

அதன் பிறகு ,செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தெலுங்கானா மாநிலத்துக்கு தமிழக முதல்வர் அவர்களால் நிவாரண பொருட்கள் வழங்கப்படும் எனவும், ஆசிரியர் தகுதி தேர்வு சான்றிதழ் குறித்து முதல்வர் பிரதமருக்கு கடிதம் அனுப்பி உள்ளதாகவும் இதன் மூலம்  ஆயுள்காலம் முழுவதும் அச்சான்றிதழை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாகவும் கூறிய அவர், நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடையக் கூடிய வகையில் விரைவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் நல்ல முடிவுகளை அறிவிப்பார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்