எந்த முடிவுகளையும் முதல்வர் தான் அறிவிப்பார் – அமைச்சர் செங்கோட்டையன்!
பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்த முடிவுகளையும் முதல்வர் தான் அறிவிப்பார் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கொரானா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதிலும் தனது தீவிரத்தை குறைத்துக் கொள்ளாமல் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. சில இடங்களில் மட்டுமே கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. இந்நிலையில் மார்ச் மாதம் முதலே தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நிலையில் இருந்ததால், பள்ளிகள் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் உள்ளது. ஆந்திராவில் வருகின்ற நவம்பர் 2 ஆம் தேதி முதல் பள்ளிகள் அரை நேரம் மட்டும் நடத்த அனுமதி அளிக்கப்பட்டு பள்ளி திறப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இது குறித்து இன்று கள்ளக்குறிச்சியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், தமிழகத்தை பொறுத்தவரையிலும் கொரோனாவின் தீவிரம் இன்னும் குறையாத வண்ணம் இருப்பதால், பள்ளி கல்லூரிகள் திறப்பது குறித்து முதல்வர் எடப்பாடி அவர்கள் அறிவிப்பார். எந்த ஒரு முடிவுகளும் முதல்வரால் தான் எடுக்கப்படுகிறது. எனவே விரைவில் இது குறித்த முடிவுகளை முதல்வர் அறிவிப்பார் என அவர் தெரிவித்துள்ளார்.