புதுச்சேரியில் நேற்று முழு ஊரடங்கையொட்டி காரில் சென்று ஆய்வு செய்த முதல்வர்.!
புதுச்சேரியில் நேற்று பிறக்கப்பிக்கப்பட்ட ஒரு நாள் ஊரடங்கை மக்கள் முறையாக கடைப்பிடிக்கிறார்களா என்பதை முதல்வர் நாராயணசாமி காரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனை கட்டுப்படுத்த ஒரு சில இடங்களில் ஒரு நாள் முழு ஊரடங்கு என்ற முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் புதுச்சேரி மாநிலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில் எல்லா செவ்வாய்க்கிழமைகளிலும் முழு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எனவே செவ்வாயான நேற்று காலை 6மணி முதல் இன்று காலை 6 மணி வரை முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. மக்கள் அரசின் உத்தரவை மீறாமல் ஒரு நாள் ஊரடங்கை கடைப்பிடிக்கிறார்களா என்பதை முதல்வர் நாராயணசாமி காரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அந்த வகையில் நேற்றிரவு முதல்வர் தனது காரில் புதுச்சேரி எல்லைகளான கோரிமேடு, காலாப்பட்டு பகுதிகளிலும், நகர பகுதிகளில் உள்ள சாலைகளிலும் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த நபரை போலீசார் தடுத்து நிறுத்த அவரிடம் எதற்காக வெளியே செல்கிறீர்கள் என்ற காரணத்தை கேட்ட பின்னர் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். ஆய்வை முடித்த பின்னர் ஒரு நாள் ஊரடங்கை மக்கள் முறையாக கடைப்பிடித்துள்ளார்கள். மேலும் இம்மாதம் முழுவதும் செவ்வாய்க்கிழமை மட்டும் ஒருநாள் முழு ஊரடங்கு நீடிக்கும் என்று தெரிவித்துள்ளார்.