இலங்கைத் தமிழர்களின் நலனுக்காக தாய் உள்ளத்துடன், தந்தையின் அக்கறையுடன், பல்வேறு சிறப்புத் திட்டங்களை முதல்வர் அறிவித்துள்ளார் என்று எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்,தமிழகத்தில் வசிக்கும் இலங்கை தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னதாக அறிவித்திருந்தார்.
அதன்படி,தமிழக சட்ட பேரவையில் இன்று, விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கை தமிழ் அகதிகள் குடும்பங்களுக்கு 3,510 வீடுகள் கட்டித்தரப்படும் என்றும், வாழ்வாதார மேம்பாட்டு நிதியாக ஆண்டுதோறும் ரூ.5 கோடி ஒதுக்கப்படும் என்றும்,இலங்கை தமிழர்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு ரூ.5 கோடியும், கல்விக்காக ரூ.1 கோடியும் ஒதுக்கீடு செய்யப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய திட்டங்களை அறிவித்தார்.
இந்நிலையில்,இலங்கைத் தமிழர்களின் நலனுக்காக தாய் உள்ளத்துடன், தந்தையின் அக்கறையுடன், பல்வேறு சிறப்புத் திட்டங்களை முதல்வர் அறிவித்துள்ளார் என்று எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
மேலும்,இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:
“புலம்பெயர்ந்து தமிழ்நாட்டிற்கு வந்துள்ள, இலங்கைத் தமிழர்களின் கல்வி, உணவு, பொருளாதாரம், வாழ்வாதார மேம்பாடு என தாய் உள்ளத்துடன், தந்தையின் அக்கறையுடன், பல்வேறு சிறப்புத் திட்டங்களை அறிவித்துள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு எண்ணற்ற நன்றிகள்”,என்று தெரிவித்துள்ளார்.மேலும்,ஏதிலியான மக்களுக்கு, எல்லாமுமாக இருப்போம் என்ற நம்பிக்கையை விதைத்திருக்கிறது கழக அரசு என்றும் பதிவிட்டுள்ளார்.
சென்னை : பட்ஜெட்டுக்கு பிறகு தங்கம் விலை சரியக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு மாறாக விலை கணிசமாக அதிகரித்துள்ளது.…
திருவண்ணாமலை : நேற்று விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் சாதி, பணம் மற்றும் பொதுச்செயலாளருக்கு யார் விஸ்வாசமாக இருக்கிறார்களோ அவர்களுக்கு…
நாக்பூர் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இன்று (பிப்ரவரி 6) இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள்…
காலி : இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, இரண்டு டெஸ்ட் தொடர் மற்றும் இரண்டு ஒருநாள் தொடரில் விளையாடி…
சென்னை : இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நெல்லை மாவட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் இன்று செல்கிறார். காலை 11 மணிக்கு நெல்லை வரும்…
சென்னை : ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கிடையே இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா என பலர் நடித்துள்ள…