புயல் பாதிப்புகளை ஹெலிகாப்டரில் சென்று முதலமைச்சர் பார்வையிட்டது அவரது வசதிக்காக அல்ல..!அமைச்சர் ஜெயக்குமார்
எதிர்க்கட்சிகள் குறை சொல்லாமல் ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய தமிழகத்திற்கு உடனடியாக மத்திய குழுவை அனுப்புவது, பிரதமர் தமிழகத்தின் மீது கொண்டுள்ள அக்கறையை காட்டுகிறது.எதிர்க்கட்சிகள் குறை சொல்லாமல் ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும்.எதிர்க்கட்சிகள் எதிரி கட்சிகளாக இருக்கக் கூடாது.தமிழக அரசு கேட்ட நிதியை, மத்திய அரசு அளிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.புயல் பாதிப்புகளை ஹெலிகாப்டரில் சென்று முதலமைச்சர் பார்வையிட்டது அவரது வசதிக்காக அல்ல, மக்களுக்காகவே ஆகும். ஹெலிகாப்டரில் முதல்வர் சென்று பார்வையிட்டதால்தான், பாதிப்புகளை விரைந்து கணக்கிட்டு பிரதமரிடம் அறிக்கை தாக்கல் செய்ய முடிந்தது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.