காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்து மாணவர்களுக்கு உணவு ஊட்டிய முதல்வர்…!
மதுரையில் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்து மாணவர்களுடன் அமர்ந்து உணவு அருந்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மதுரை ஆதிமூலம் பிள்ளை தெருவில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து மாணவர்களுக்கு உணவு பரிமாறிய முதல்வர், அதன் பின் மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டு, மாணவர்களுக்கும் ஊட்டி விட்டார். மதுரை மாவட்டத்தில் மொத்தமாக 1246 தொடக்கபள்ளிகள் உள்ள நிலையில் முதற்கட்டமாக 26 பள்ளிகளை சேர்ந்த 4,136 மாணவ மாணவிகளுக்கு காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டது.
முன்னதாக மதுரை நெல் பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள பள்ளி மாணவ, மாணவிகளுக்கான காலை சிற்றுண்டி தயாரிக்கும் இடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.