திமுக மகளிர் உரிமை மாநாட்டிற்கான ஏற்பாடுகளை நேரில் பார்வையிட்டார் முதல்வர்…!

Tamilnadu CM MK Stalin in Tanjore

சென்னையில் திமுக மகளிர் அணி சார்பில் அக். 14ம் தேதி  மகளிர் உரிமை மாநாடு நடைபெறும் என்று தி.மு.க. துணைப்பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிப்பட்ட அறிக்கையில், மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை உடனே அமல்படுத்துவது உள்ளிட்ட பெண்ணுரிமைத் தொடர்பான கருத்துரையாடலை முன்னெடுப்பதை காலத்தின் தேவையாகக் கருதி, கழகத் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், கழக மகளிர் அணி சார்பில் வரும் 14ம் (சனிக்கிழமை) அன்று சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் ‘மகளிர் உரிமை மாநாடு’ பிரமாண்டமாக நடைபெற உள்ளது.

அக்.14 மகளிர் உரிமை மாநாடு… சோனியா காந்தி, ப்ரியங்கா காந்தி வருகை – திமுக எம்பி கனிமொழி அறிவிப்பு!

இந்த மாநாட்டில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் சுப்ரியா சுலே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர் தோழர் சுபாஷினி அலி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினரும், இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் பொதுச் செயலாளருமான தோழர் ஆனி ராஜா உள்ளிட்ட INDIA கூட்டணியின் பல்வேறு முக்கிய அகில இந்தியத் தலைவர்கள் சிறப்புரை ஆற்ற உள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னையில் நாளை நடைபெறும் திமுக மகளிர் உரிமை மாநாட்டிற்கான ஏற்பாடுகளை நேரில் பார்வையிட்டார். சோனியாகாந்தி அவர்கள், மாநாட்டில் பங்கேற்க 5 வருடங்களுக்கு பிறகு சென்னை வரும் நிலையில், இன்று இரவு சென்னை வரும் சோனியா காந்தியை முதல்வர்  மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வரவேற்க உள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்