அத்திவரதர் வைபவம் குறித்த அத்திகிரி புத்தகத்தை தமிழக முதலமைச்சர் வெளியிட்டார் !

காஞ்சிபுரம் வரதராஜர் பெருமாள் கோவிலில் உள்ள அனந்தசரஸ் குளத்தில் இருந்து அத்திவரதர் சிலை எடுக்கப்பட்டு கடந்த மாதம் 1-ம் தேதி முதல் பக்தர்களுக்காக வசந்த மண்டபத்தில் காட்சியளித்து வருகிறார்.
அத்திவரதர் முதல் 31 நாள்கள் பக்தர்களுக்கு சயன கோலத்தில் காட்சியளித்தார்.பின்னர் கடத்த 1-தேதி முதல் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். அத்திவரதர் இன்னும் பத்து நாள்கள் மட்டுமே காட்சியளிக்க உள்ளதால் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து உள்ளது.
இந்நிலையில் தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.அந்த கூட்டத்தில் பாதுகாப்பு , அடிப்படை வசதிகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.
மேலும் அத்திவரதர் வைபவம் குறித்த அத்திகிரி என்ற புத்தகத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட ஓபிஎஸ் பன்னீர்செல்வம் பெற்று கொண்டார்.
லேட்டஸ்ட் செய்திகள்
மத கஜ ராஜா வசூலை மொத்தமாக எரித்த டிராகன்! 5 நாட்களில் இவ்வளவு வசூலா?
February 26, 2025
AFG vs ENG: இந்த டார்கெட்டை அடிச்சு காமிங்க! சதம் விளாசி இங்கிலாந்துக்கு பெரிய இலக்கு வைத்த இப்ராஹிம்!
February 26, 2025
முதல்ல அரசியல் நாகரிகத்தை கத்துக்கோங்க! விஜய்க்கு CPI மாநில செயலாளர் முத்தரசன் அட்வைஸ்!
February 26, 2025
இப்படியா விளையாடுவீங்க? பாகிஸ்தானை விளாசி தள்ளிய ஷோயிப் அக்தர்!
February 26, 2025