தமிழக முதல்வர் தான் திரித்து பேசுகிறார் ..! தமிழிசை கண்டனம் !

Tamilisai Soundararajan

சென்னை : பிரதமர் நரேந்திர மோடி பேசியதை, தமிழக முதல்வர் ஸ்டாலின் திரித்து பேசி அரசியல் ஆதாயம் தேட பார்ப்பதாக கூறி தென் சென்னை பாஜக வேட்பாளரான தமிழிசை சௌந்தரராஜன் அவரது X தளத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழக முதலைமைச்சரான மு.க.ஸ்டாலின் அவர்கள் பிரதமர் நரேந்திர மோடி ஒட்டு மொத்த தமிழர்களையெல்லாம் அவமதித்துவிட்டதாக ஒரு கருத்தை தெரிவித்திருந்தார். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தமிழிசை அவரது X தளத்தில், “தமிழக முதலைமைச்சரான மு.க.ஸ்டாலின் அவர்கள் பிரதமர் மோடி அவர்கள் ஒட்டுமொத்த தமிழர்களையெல்லாம் அவமதித்துவிட்டதாக ஒரு தவறான கருத்தை வேண்டுமென்றே பரப்பிக்கொண்டிருக்கிறார்.

பிரதமர் மோடி பேசிய போது ‘ஒரிசாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரத்தில் இல்லாமல் வெறும் அதிகாரியாக இருந்து கொண்டு ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தையே ஆட்டி படைத்துக்கொண்டிருக்கும் ஒருவர் மக்களுக்கு கிடைக்க வேண்டியதை கிடைக்காமல் தடுக்கிறார்’ என்ற உண்மை நிலையை எடுத்துச் சொல்வதற்காக அந்த தனி நபரை குறிப்பிட்டு மட்டுமே பேசினார்.

அவர் குறிப்பிட்டு பேசிய நபர் தமிழராக இருப்பதால் ஒட்டுமொத்த தமிழர்களையே அவமதித்துவிட்டார் என்று மு.க.ஸ்டாலின் திரித்து கூறுகிறார். இதன் மூலம் தமிழர்களை திரு.மு.க.ஸ்டாலின் தான் அவமானப்படுத்துகிறார் என்று தான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இப்படி தவறான முன்னுதாரணமாக இருக்கக்கூடிய தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரை குறிப்பிட்டு பேசும் போது ஒட்டு மொத்த தமிழர்களையும் அவர் அவமதிக்கிறார் என்று கூறிய மு.க.ஸ்டாலின் அவர்கள் தான் இந்த அவமரியாதையை எல்லா தமிழர்களையும் பற்றி குறிப்பிடுவதாக திரித்து பேசி இருக்கிறார்.

இதனால் என்னை பொறுத்தவரை ஸ்டாலின் தான் மோடி பேசியதை திரித்து பேசி வழக்கம்போல் தனது அரசியல் ஆதாயத்திற்கு பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்”, என்று தமிழிசை சவுந்தரராஜன் அவரது X தளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்