தொலைபேசி மூலம் டாக்டர் ராமதாஸை தொடர்புகொண்ட தமிழக முதல்வர்! காரணம் என்ன?
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், டாக்டர் ராமதாஸ் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியும், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனருமான டாக்டர் ராமதாஸ் இன்று தனது 81-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து, அவரது கட்சி தொண்டர்கள், கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு, அவரது பிறந்தநாளை சிறப்பிக்கும் வண்ணம், அங்கங்கு மரக்கன்று நட்டு சிறப்பித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், டாக்டர் ராமதாஸ் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், பழனிசாமி அவர்கள் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘இன்று 81-வது பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரும், மூத்த அரசியல்வாதியுமான மருத்துவர் ராமதாஸ் அவர்கள் நீண்ட ஆயுளுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும், வளமும் நலமும் பெற்று நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதாக தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தேன்.’ என பதிவிட்டுள்ளார்.