ஆளுநரை புன்னகையோடு சமாளிக்கிறார் முதல்வர் – அமைச்சர் துரைமுருகன்

minister duraimurugan

உலகத்திலேயே 50 ஆண்டு காலம் கட்சிக்கு தலைவராக இருந்த ஒரே மனிதர். கலைஞர் கருணாநிதி தான் என அமைச்சர் துரைமுருகன் பேச்சு. 

கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் அவர்கள் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தமிழ் செம்மொழி அந்தஸ்த்து பெற்றதற்கு மிக முக்கிய காரணம் கலைஞர். தமிழ் மொழி இருக்கும் வரை கலைஞர் இருப்பார் என தெரிவித்தார்.

மேலும், உலக வரலாற்றிலும் கலைஞர் இருக்கிறார். உலகில் எந்த நாட்டிலும் எந்த கட்சியின் தலைவரும் 50 ஆண்டுகள் தலைவராக இருந்தது கிடையாது. உலகத்திலேயே 50 ஆண்டு காலம் கட்சிக்கு தலைவராக இருந்த ஒரே மனிதர். கலைஞர் கருணாநிதி தான். வரலாற்றில் எந்த பக்கத்தை திருப்பினாலும் கருணாநிதி இருப்பார்.

தமிழ்நாடு வரலாற்றில் நிறைந்த மாமனிதர் கருணாநிதி என தெரிவித்த அவர், ஆளுநர் குறித்து அவர் பேசுகையில், வழக்கத்திற்கு மாறாக ஆளுநர் நம்முடன் சண்டைக்கு வருகிறார். ஆளுநரை புன்னகையோடு சமாளிக்கிறார் முதல்வர் என புகழாரம் சூட்டியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்