ரூ.6.50 கோடியில் போலீஸ் பயன்பாட்டுக்கு சொகுசு கார்கள் திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்..!
சென்னை பெருநகர காவல்துறைக்கு ரூ.6.50 கோடி செலவில் 53 புதிய கார்களை காவல்துறை பயன்பாட்டிற்கு மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்துள்ளார். தமிழக முதலமைச்சர் இன்று மு.க ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி பல்வேறு துறைகளின் நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்.
அதன்படி ரூ.6.5 கோடி மதிப்பீட்டில் வாங்கப்பட்ட 25 ஹூண்டாய் கிரேட்டா, 8 இனோவா கிரிஸ்டா, 20 பொலிரோ கார்களை காவல்துறை பயன்பாட்டுக்குத் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதோடு பணிநியமன ஆணைகள், விருதுகள் போன்றவற்றையும் வழங்கினார்.
இது தவிர தமிழகத்தின் முக்கியமான மூன்று கோவில்களில் அன்னதானம் வழங்கும் திட்டத்தையும் ஆரம்பித்து வைத்தார். அதன்படி, பெரியபாளையம் பவானி அம்மன் கோவில், மேல்மலையனூர் அங்காள பரமேஷ்வரி கோவில், கோவை ஆணைமலை மாசாணியம்மன் கோவில் ஆகிய கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழக்கும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்.