திருப்பூரில் 336.98 கோடி மதிப்பிலான புதிய மருத்துவ கல்லூரிக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.!

திருப்பூரில் 336.98 கோடி மதிப்பிலான அமையவுள்ள புதிய மருத்துவக் கல்லூரிக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
மத்திய அரசு தமிழகத்தில் புதிய அரசு மருத்துவ கல்லூரிகளை அமைக்க ஒரே நேரத்தில் 11 கல்லூரிகளுக்கு ஒப்புதல் அளித்தது. அதன்படி, புதிய அரசு மருத்துவ கல்லுரிகளுக்கு முதல்வர் பழனிசாமி நேரடியாக சென்று அடிக்கல் நாட்டினார். இதையடுத்து, கடந்த மார்ச் மாதம் 2 கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்ட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அரசு மற்றும் தனியார் அனைத்து நிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்பட்டன.
இந்நிலையில், வருகின்ற 18 ஆம் தேதி திருப்பூருக்கும், 19 ஆம் தேதி திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரிக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொளிக்காட்சி மூலம் அடிக்கல் நாட்டவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி, சென்னை தலைமை செயலகத்தில் இருந்து திருப்பூரில் 336.98 கோடி மதிப்பிலான அமையவுள்ள புதிய மருத்துவக் கல்லூரிக்கு முதல்வர் பழனிசாமி காணொளிக்காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சி முதல்வருடன், துணை முதல்வர், அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் ஆகியோர் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025