தீவிரவாதம் எங்கு தலைத் தூக்கினாலும் முதல்வர் இரும்பு கரம் கொண்டு அடக்குவதற்கு தயாராக உள்ளார் என சேகர் பாபு பேட்டி.
அமைச்சர் சேகர்பாபு சென்னை முழுவதும் தீபாவளி பண்டிகை முன்னிட்டு கடந்த மூன்று நாட்களாக இரவு பகல் பாராமல் பட்டாசு கழிவுகளையும், பழைய பொருட்களின் கழிவுகளையும் அகற்றிய தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.
அதன் பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் எதிர்மறை கருத்துக்கள் கொண்ட பாஜக முக்கிய தலைவர்களின் சிலர் என்னைத் தொடர்பு கொண்ட திருச்செந்தூரில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகள் திருப்தி அளிப்பதாக தெரிவித்துள்ளார். ராணுவத்திற்கு நிகராக போர்க்கால அடிப்படையில் எந்த நிலையையும் சமாளிக்க சென்னை மாநகராட்சியை முதல்வர் தயார் படுத்தி வைத்துள்ளார். தமிழக அரசும் சென்னை மாநகராட்சியும் பேரிடரை சமாளிக்க முதலமைச்சர் உத்தரவின் பேரில் தயார் நிலையில் உள்ளது என தெரிவித்துள்ளார்.
மேலும் கோவை கார்வெடிவிபத்து சம்பவம் குறித்து பேசிய அவர் குற்றம் கண்டுபிடிக்க வேண்டும் என்று இருப்பவர்கள் எந்த நிலையில் இருந்தாலும் பேசிக் கொண்டுதான் இருப்பார்கள் அதைப் பற்றி அரசு கவலைப்படுவதில்லை.
தமிழகத்தில் மக்கள் அமைதியாகவும் நிம்மதியாகவும் ஜாதி மத இன மோதல்களுக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும். தீவிரவாதம் எங்கு தலைத் தூக்கினாலும் முதல்வர் இரும்பு கரம் கொண்டு அடக்குவதற்கு தயாராக உள்ளார் என தெரிவித்துள்ளார்.
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…
சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…
சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…