யாருடைய ஆலோசனையை கேட்கும் மனநிலையில் முதலமைச்சர் இல்லை- ஸ்டாலின்
யாருடைய ஆலோசனையை கேட்கும் மனநிலையில் முதலமைச்சர் இல்லை என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டுள்ளார்.அந்த வீடியோவில் அவர் பேசுகையில்,தமிழக அரசுக்கு நூற்றுக்கணக்கான ஆலோசனைகளை கூறி வருகிறேன் .மக்களைக் காக்கும் பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது என்பதால், ஆலோசனைகளை கூறி வருகிறேன். நான் கூறிய ஆலோசனைகள் எதையும் முதலமைச்சர் கேட்கவில்லை.மருத்துவர்கள் பலர் என்னிடம் பேசி வருகிறார்கள். அவர்களது ஆலோசனைகளையும் கூறினேன்.
யாருடைய ஆலோசனையை கேட்கும் மனநிலையில் முதலமைச்சர் இல்லை .ஆக்கப் பூர்வமான ஆலோசனைகளை நான் கூறவில்லை என சொல்கிறார் முதலமைச்சர்.
என்னுடைய அறிக்கைகள் அனைத்தும் ஆலோசனை கூறும் வகையில் உள்ளது. ஊரடங்கில் தளர்வு அறிவித்து, தவறு செய்தது முதலமைச்சர் . மக்கள் நெருக்கம் அதிகம் இருப்பதால் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகம் என்கிறார், முதலமைச்சர்.அதிக மக்கள் நெருக்கம் உள்ள மும்பை தாராவியில் கூட கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
கடைசி எச்சரிக்கை #ShameOnEPSgovt https://t.co/76dDbiv01V
— M.K.Stalin (@mkstalin) June 28, 2020