7.5% உள் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததும், முதலமைச்சர் வேடிக்கை பார்ப்பதும் துரோகம் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மருத்துவ இடங்களில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு குறித்து சட்டத்தை 2020-2021 ஆம் கல்வி ஆண்டிலே அமல்படுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கில் , உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.அதில்,மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா இன்னுமும் ஆளுநர் பரிசீலனையில் உள்ளது. ஆளுநருக்கு காலகெடுவோ, ஒப்புதல் அளிக்க உத்தரவோ நீதிமன்றத்தால் அளிக்க முடியாது.7.5% இட ஒதுக்கீட்டு விவகாரத்தில் ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் மருத்துவ கல்லூரிகளில் கலந்தாய்வு சம்பந்தமான எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகாது என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,நீட் தேர்வால் அரசுப்பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுவதால் அளிக்கப்பட்ட 7.5% உள் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததும்,முதலமைச்சர் வேடிக்கை பார்ப்பதும் துரோகம்.ஆளுநர்-CM-பாஜக கூட்டணி நீட் விலக்கு மசோதாவை நீர்க்கச் செய்தது போல் இன்றி, இதற்கு உடனடியாக ஒப்புதல் வழங்குக என்று தெரிவித்துள்ளார்.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…