வேளாண் சங்கம திருவிழாவை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!

AgricultureAssociation2023t

வேளாண் சங்கமம் 2023 திருவிழாவை திருச்சியில் இன்று தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.

திருச்சியில் மூன்று நாட்கள் நடைபெறும் வேளாண் சங்கம திருவிழாவை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தனியார் கல்லூரியில் விவசாயிகளுக்கான வேளாண் சங்கமம் 2023 என்ற தலமைப்பில் மாபெரும் வேளாண் கண்காட்சி நடக்கிறது. இந்த கண்காட்சியில் புதிய வேளாண் இயந்திரங்கள், பாரம்பரிய நெல் இரங்கல் உள்ளிட்டவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

வேளாண்மை, கால்நடை, மீன். பட்டுப்பூச்சி வளர்ப்பு குறித்து கருத்தரங்கம் உள்ளிட்டவையும் இடம்பெற்றுள்ளன. அரசு, தனியார் நிறுவனங்கள் பங்கேற்று தங்களது புதிய கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தியுள்ளன. மேலும், வேளாண் கண்காட்சியில் 300 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. திருச்சி – திண்டுக்கல் நெடுஞ்சாலையில் உள்ள கேர் கல்லூரி வளாகத்தில், இன்று முதல் 3 நாட்களுக்கு வேளாண் சங்கமம் 2023 என்ற மாபெரும் கண்காட்சி நடைபெறுகிறது.

உழவர் நலத்துறை சார்பில் வேளாண் சங்கமம் திருவிழா நடைபெறுகிறது. அப்போது, மேலும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்குகிறார் முதல்வர். பாரம்பரிய நெல் உற்பத்தியில் சிறப்பாக செயல்பட்ட விவசாயிகளுக்கு விருதுகளும் வழங்குகிறார் முதலமைச்சர் முக ஸ்டாலின்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்