சேப்பாக்கம் மைதானத்தில் புதிய கேலரியை திறந்து வைத்தார் முதலமைச்சர்!
சேப்பாக்கம் மைதானத்தில் புதிதாக கட்டப்பட்ட கேலரிக்கு கருணாநிதி பெயர் சூட்டினார் முதலமைச்சர்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய கேலரியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் ரூ.139 கோடியில் புதிதாக கேலரி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சேப்பாக்கம் மைதானத்தில் புதிதாக கட்டப்பட்ட கேலரியை திறந்து வைத்து முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயர் சூட்டினார் முதலமைச்சர்.
மேலும், சேப்பாக்கம் மைதானத்தில் கட்டப்பட்டுள்ள புதிய கேலரியை திறந்து வைத்த பின் நேரில் பார்வையிட்டு வருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின். கேலரி திறப்பு விழாவில், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் இந்திய கேப்டன் தோனி, பிராவோ, தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் அசோக் சிகாமணி மற்றும் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.