இதனை சரி செய்ய முதலமைச்சரே நேரடியாக நடவடிக்கையில் இறங்கியுள்ளார் – கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்
மழை நீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து உயிரிழப்புக்கள் ஏற்படுவது வருத்தப்பட வேண்டிய விஷயம் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
புதியதலைமுறை செய்தியாளராக பணியாற்றிய முத்துகிருஷ்ணன் என்ற இளைஞர் மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார். இவரது மரியாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட பலர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
இந்த நிலையில், மழைநீர் வடிகால் விபத்து குறித்து, அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் கூறுகையில், மழை நீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து உயிரிழப்புக்கள் ஏற்படுவது வருத்தப்பட வேண்டிய விஷயம்.சரி செய்ய முதலமைச்சரே நேரடியாக நடவடிக்கையில் இறங்கியுள்ளார் என தெரிவித்துள்ளார்.