வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பை முதலமைச்சர் வெளியிட்டுள்ளார் – ஓபிஎஸ்
வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பை முதலமைச்சர் வெளியிட்டுள்ளார் என முதல்வரை பாராட்டிய ஓபிஎஸ்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 110 விதியின் கீழ் பேரவையில் உரையாற்றினார். பேசிய அவர், வைக்கம் போராட்டம் தொடங்கிய நூற்றாண்டின் தொடக்க நாள் இன்று; வரலாற்றின் முழு முக்கியமான நாள் வைக்கம் போராட்டம் வெற்றி பெறக் காரணமாக இருந்த பெரியாரை போற்றும் விதமாக வரலாற்று சிறப்பு மிக்க அறிவிப்பை வெளியிடுகிறேன்.
வைக்கம் ஆலய நுழைவுப் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவை தமிழ்நாடு அரசு சிறப்பாக கொண்டாட இருக்கிறது. ஓராண்டு முழுவதும் அப்போராட்டத்தின் நோக்கத்தையும், வெற்றியையும் பொதுமக்கள், மாணவர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் நிகழ்ச்சி நடத்தப்படும்.
வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பு
இதுகுறித்து, சட்டப்பேரவையில் பேசிய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பை முதலமைச்சர் வெளியிட்டுள்ளார் என பாராட்டியுள்ளார்.