மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கினார் முதலமைச்சர்!

Default Image

சென்னை தலைமை செயலகத்தில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை ஆணையை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்.

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் வசிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை ஆணையை வழங்கினார் முதலமைச்சர் முக ஸ்டாலின். இதுபோன்று, தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலம் தேர்வான காவல்துறை அதிகாரிகளுக்கு பணி நியமன ஆணை வழங்கினார் முதல்வர்.

மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு பணி நியமன ஆணைகளை சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் வழங்கினார். இதனிடையே, ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய ஆதிதிராவிடர் கல்வி உதவித்தொகை பெற புதிய இணையதளத்தை தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.

இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள்: 28.02.2023 ஆகும். அதன்படி, ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற tnadtwscholarship.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்