வயநாடு நிலச்சரிவு : உயிரிழந்த தமிழருக்கு நிவாரணம் அளித்ததார் முதலமைச்சர்!
வயநாடு : கேரளா , வயநாட்டில் பருவ மழை மிக தீவிரமாக பெய்து வருவதன் விளைவாக நேற்று நள்ளிரவு பெரும் நிலச்சரிவு என்பது ஏற்பட்டது. இதில் சிக்கி பரிதாபகமாக 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 200-க்கும் மேற்பட்டோர் மையமாகி உள்ளதாகவும். அவர்களை தேடும்பணி மிக தீவீரமாக நடைபெற்று பெறுகிறது.
இந்த நிலச்சரிவில் தமிழகத்தின் நீலகிரியை சேர்ந்த 52 வயதுடைய கல்யாண் குமார் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில், அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்து, நிவாரணம் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், “கேரள மாநிலம், வயநாடு மாவட்டம், சூரல்மலையில் பணியாற்றிவந்த நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த திரு.கல்யாணகுமார் (வயது 52) என்பவர் நேற்று (30.07.2024) அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
இச்சம்பவத்தில் உயிரிழந்த திரு.கல்யாணகுமார் அவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், காலம் சென்ற கல்யாணகுமார் அவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்”, என்று அந்த அறிக்கையில் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.