செய்தியாளர் முத்துகிருஷ்ணன் குடும்பத்திற்கு நிவாரண நிதி வழங்கிய முதல்வர்…!
செய்தியாளர் முத்துகிருஷ்ணனின் தாயாரிடம் ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்கப்பட்டது.
சென்னையில் மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்த செய்தியாளர் முத்துகிருஷ்ணனுக்கு கம்பி குத்தியதில், ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த நிலையில், அவருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ₹2 லட்சமும் பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதி திட்டத்தின் கீழ் ₹3 லட்சம் நிதிஉதவி வழங்கப்படும் என அறிவித்திருந்த நிலையில், தென்காசியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், செய்தியாளர் முத்துகிருஷ்ணனின் தாயாரிடம் ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்கப்பட்டது.