முதல்வர் தன் பணியை முறையாக செய்யவில்லை அவர் ராஜினாமா செய்ய வேண்டும் …!வைகோ
முதல்வர் தன் பணியை முறையாக செய்யவில்லை அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று மதிமுக பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக புதுக்கோட்டையில் மதிமுக பொது செயலாளர் வைகோ கூறுகையில்,முதல்வர் தன் பணியை முறையாக செய்யவில்லை அவர் ராஜினாமா செய்ய வேண்டும். கஜா புயல் தொடங்கும் முன்பு முகாம்கள் அமைத்து, அங்கேயே தங்கியிருந்து முதல்வர் பணியாற்றியிருக்க வேண்டும்.கஜா புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் மதிமுக பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.