இறுதிக்கட்டத்தில் முதலமைச்சர் கோப்பை! போட்டியை காண அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அழைப்பு!

Published by
பாலா கலியமூர்த்தி

மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கவுள்ள வீரர் – வீராங்கனையருக்கு வாழ்த்துகள் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ட்வீட்.

ஜூலை 1 முதல் 25-ஆம் தேதி வரை நடைபெறும் முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிகளை காண அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.  இதுதொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ட்விட்டர் பதிவில், ஜூலை 1 முதல் 25-ஆம் தேதி வரை நடைபெறும் முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிகளை நேரில் கண்டு வீரர்களை பொதுமக்கள், விளையாட்டு ஆர்வலர்கள் உற்சாகப்படுத்த வேண்டும். கிராமப்புற, ஏழை விளையாட்டு வீரர்களின் திறமைக்கு களம் அமைத்து கொடுக்கிறது முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு.

கிராமப்புற – ஏழை – எளிய விளையாட்டு வீரர்களின் திறமைக்குக் களம் அமைத்துக் கொடுக்கும் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. 27000 வீரர் – வீராங்கனையர் பங்கேற்கவுள்ள மாநில அளவிலான போட்டிகள் சென்னையில் வரும் ஜூலை 1 முதல் 25ம் தேதி வரை நடைபெறவுள்ளன. எனவே, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கவுள்ள வீரர் – வீராங்கனையருக்கு வாழ்த்துகள். போட்டிகளை நேரில் கண்டு வீரர்களை உற்சாகப்படுத்த பொதுமக்கள் – விளையாட்டு ஆர்வலர்களை அழைக்கின்றோம் என்றுள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

மகளிர் ஒருநாள் போட்டி: இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதல்!

குஜராத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்…

1 hour ago

ஏற்றமா? இறக்கமா? ‘விடுதலை 2’ இரண்டாம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம்.!

சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, 'விடுதலை' முதல் பாகம்…

1 hour ago

திமுக செயற்குழு தீர்மானங்கள்: அமித்ஷாவை கண்டித்து… பேரிடர் நிவாரண நிதி வரை!

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக அமைச்சர்கள்,…

2 hours ago

நான் மனித நேயமற்றவனா? ‘என் பெயருக்கு களங்கம் விளைவிக்கப் பார்க்கின்றனர்’ – அல்லு அர்ஜுன்!

ஹைதராபாத்: 'புஷ்பா 2' சிறப்புக் காட்சியின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு, பெண் உயிரிழந்ததற்கு, 'போலீஸ் சொன்னதை மதிக்காமல், அல்லு அர்ஜுன்…

3 hours ago

புயல் எச்சரிக்கை தளர்வு… 9 துறைமுகங்களில் ஏற்பட்ட 1ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு இறக்கம்!

சென்னை: வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை தொடர்ந்து, தூத்துக்குடி உட்பட 9 துறைமுகங்களில் நேற்று முன் தினம்…

3 hours ago

“ரகுபதி சட்டத்துறை அமைச்சரா? பேட்டை ரவுடியா? ” அண்ணாமலை கடும் விமர்சனம்!

சென்னை : அண்மையில் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசுகையில், பல்வேறு குற்ற வழக்குகளில் சிக்கியவர்களை பாஜக…

16 hours ago