இறுதிக்கட்டத்தில் முதலமைச்சர் கோப்பை! போட்டியை காண அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அழைப்பு!
மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கவுள்ள வீரர் – வீராங்கனையருக்கு வாழ்த்துகள் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ட்வீட்.
ஜூலை 1 முதல் 25-ஆம் தேதி வரை நடைபெறும் முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிகளை காண அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ட்விட்டர் பதிவில், ஜூலை 1 முதல் 25-ஆம் தேதி வரை நடைபெறும் முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிகளை நேரில் கண்டு வீரர்களை பொதுமக்கள், விளையாட்டு ஆர்வலர்கள் உற்சாகப்படுத்த வேண்டும். கிராமப்புற, ஏழை விளையாட்டு வீரர்களின் திறமைக்கு களம் அமைத்து கொடுக்கிறது முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு.
கிராமப்புற – ஏழை – எளிய விளையாட்டு வீரர்களின் திறமைக்குக் களம் அமைத்துக் கொடுக்கும் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. 27000 வீரர் – வீராங்கனையர் பங்கேற்கவுள்ள மாநில அளவிலான போட்டிகள் சென்னையில் வரும் ஜூலை 1 முதல் 25ம் தேதி வரை நடைபெறவுள்ளன. எனவே, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கவுள்ள வீரர் – வீராங்கனையருக்கு வாழ்த்துகள். போட்டிகளை நேரில் கண்டு வீரர்களை உற்சாகப்படுத்த பொதுமக்கள் – விளையாட்டு ஆர்வலர்களை அழைக்கின்றோம் என்றுள்ளார்.
கிராமப்புற – ஏழை – எளிய விளையாட்டு வீரர்களின் திறமைக்குக் களம் அமைத்துக் கொடுக்கும் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
27000 வீரர் – வீராங்கனையர் பங்கேற்கவுள்ள மாநில அளவிலான போட்டிகள் சென்னையில் வரும் ஜூலை 1 முதல் 25 ஆம் தேதி வரை… pic.twitter.com/oCtYdinexO
— Udhay (@Udhaystalin) June 28, 2023