பி.டி.உஷாவுக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர்..!
பி.டி.உஷாவுக்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்.
இசையமைப்பாளர் இளையராஜா,பி டி உஷா, வீரேந்திர ஹெக்கடே மற்றும் வி.விஜயேந்திர பிரசாத் ஆகியோர் மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் வாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில், தற்போது பி.டி.உஷாவுக்கு வாழ்த்து தெரிவித்து ட்விட் செய்துள்ளார்.
அந்த ட்விட்டர் பதிவில், ‘மாநிலங்களவை நியமன உறுப்பினராக நியமிக்கப்பட்ட பி.டி.உஷாவுக்கு வாழ்த்துக்கள். நாடாளுமன்ற விவாதங்களில் நீங்கள் பங்கேற்பது நமது நாட்டின் விளையாட்டு உள்கட்டமைப்பிற்கு பெரும் ஊக்கத்தை அளிக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்’ என பதிவிட்டுள்ளார்.
Congratulations to @PTUshaOfficial on being nominated to the Council of States.
I am certain that your participation in the Parliamentary debates will give a major boost to our country’s sports infrastructure.
— M.K.Stalin (@mkstalin) July 7, 2022