உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி அறிவித்தார் முதலமைச்சர்!

Default Image

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தனியார் குழந்தைகள் காப்பகத்தில் உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி அறிவித்தார் முதலமைச்சர்.

இதுதொடர்பாக முதலமைச்சர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், திருப்பூர் மாவட்டத்தில் மஜரா திருமுருகன்பூண்டியில் செயல்பட்டுவரும் தனியார் குழந்தைகள் காப்பகத்தில் தங்கி கல்வி பயின்று வந்த மாணவர்களில் மாதேஷ் (15), பாபு (13) மற்றும் ஆதிஷ் (8) ஆகிய மூன்று சிறுவர்களும் காப்பகத்தில் உணவு உட்கொண்ட பின்னர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நேற்று மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லும்போது வழியிலேயே இறந்துவிட்டனர் என்ற வேதனையான செய்தியினைக் கேட்டு மிகுந்த துயருற்றேன்.

உயிரிழந்த பிள்ளைகளின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். சிகிச்சையிலுள்ள சிறுவர்களுக்கு தேவையான மருத்துவ உதவி வழங்க அறிவுறுத்தியுள்ளேன். உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூபாய் இரண்டு இலட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

இதனிடையே, திருப்பூர் தனியார் குழந்தைகள் காப்பகத்தை நேரில் சென்று ஆய்வு அமைச்சர் கீதா ஜீவன் மேற்கொண்டார். திமுக சார்பாக உயிரிழந்த 3 சிறுவர்களுக்கு தலா ரூ.1 லட்சம், பாதிக்கப்பட்ட 11 சிறுவர்களுக்கு தலா ரூ.50,000 நிவாரண நிதியை வழங்கினார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மெத்தனப்போக்கால் தான் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. காப்பகம் மூடப்படுவதாகவும், காப்பகத்தில் உள்ள குழந்தைகள் அரசு காப்பகத்திற்கு மாற்றப்படுவதாகவும் தெரிவித்த அமைச்சர்,  குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கூறியிருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்