முதல்வர், துணை முதல்வர் கேட்டல் பதவியைத் துறக்கத் தயார் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
பதவியை விட தென் தமிழகத்தின் வளர்ச்சிதான் முக்கியம் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் தலைநகராக இருந்து வருகிறது சென்னை.அங்கு மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.சென்னையில் தான் அனைத்து துறை சார்ந்த தொழிற்சாலைகள், அலுவலகங்கள் உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் இரண்டாவது தலைநகரை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது எழுந்துள்ளது. 2 ஆவது தலைநகரமாக மதுரையை நிச்சயமாக அறிவிக்க வேண்டும். மதுரை தான் முதன்மையான இடம் என்று அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ ஆகியோர் கூறினார்.
இதனிடையே அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ கருத்துக்கு நேர்மாறாக கோரிக்கை விடுத்தார் அமைச்சர் வெல்லமண்டி நட்ராஜன்.அமைச்சர் வெல்லமண்டி நட்ராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், திருச்சியை 2வது தலைநகராக அறிவிக்க வேண்டும் என்று கூறினார்.திருச்சியை 2வது தலைநகராக அறிவிக்கவேண்டும் என்பது எம்ஜிஆரின் கனவுத்திட்டம். முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரிடம் திருச்சியைதான் 2வது தலைநகராக அறிவிக்க முயற்சிப்போம் என்று தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து மதுரை இரண்டாவது தலைநகராக அறிவிக்கும் அதிமுகவின் இந்த முடிவிற்கு தற்போது எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன.இதனிடையே இதுகுறித்து விளக்கமளித்த தமிழக முதல்வர் பழனிசாமி அவர்கள், தமிழகத்தில் இரண்டாவது தலைநகர் அமைப்பது என்பது அமைச்சர்களின் கருத்து. அது தமிழக அரசின் கருத்தல்ல என்று தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், தென் தமிழகத்தின் வளர்ச்சி முக்கியமா ? பதவி முக்கியமா என்று முதலமைச்சர், துணை முதலமைச்சர் கேள்வி கேட்டால் வளர்ச்சி தான் முக்கியம் என்று கூறுவேன் என தெரிவித்துள்ளார்.