மதுபோதையில் வாகன ஓட்டிகள்… சொத்துக்களை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவு.?!
கடந்த 2 வாரத்தில் 1.68 கோடி ரூபாய் நிலுவையில் இருந்த அபராத தொகை வசூல் செய்யப்பட்டுள்ளது என சென்னை போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
புதிய போக்குவரத்து கொள்கை அமலுக்கு வந்து போக்குவரத்து விதிமீறலுக்கான கட்டணங்கள் உயர்ந்து உள்ளன. இந்த அபராத தொகையை கருத்தில் கொண்டாவது, வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை மீறாமல் இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விதிமீறல், போக்குவரத்து அபராதங்கள் ஆகியவை உள்ளிட்ட விவரங்களை சென்னை போக்குவரத்து காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், இதுவரையில் கடந்த 2 வாரங்களாக 1,628 வழக்குகள் தீர்க்கப்பட்டு, நிலுவையில் இருந்த 1.68 கோடி ரூபாய் அபராதத்தொகை வசூலிக்கப்பட்டது.
இதில், 1 கோடியே 68 லட்ச ரூபாய் அபராதத்தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் அபராதம் செலுத்தாதவர்கள் குறித்து நீதிமன்றம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி, அபராதம் செலுத்தாத 319 பேரின் அசையும் சொத்துக்களை (வாகனங்களை) பறிமுதல் செய்ய நீதிமன்றம் போக்குவரத்து காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.