மழைநீர் பெருக்கு:போக்குவரத்து மாற்றம் – சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு!

Default Image

சென்னை:மழைநீர் பெருக்கு காரணமாக செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள் குறித்து சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில்,கடந்த வாரம் பெய்த மழையால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டன.குறிப்பாக,சென்னையில் வீடுகள்,சாலைகள் எனப் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளம் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து,சென்னையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்மோட்டார் மூலமாக மழை நீர் வெளியேற்றப்பட்டு இயல்பு வாழ்க்கையை நோக்கி மக்கள் திரும்புகின்றனர்.இதற்கிடையில்,மழைநீர் வெளியேற்றும் பணிகள் நடைபெறுவதன் காரணமாக சென்னையில் அவ்வப்போது போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில்,வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னை பெருநகரில் வாகன போக்குவரத்தின் தற்போதைய நிலவரம் குறித்து,சென்னை பெருமாநகர போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.அதன்படி,

மழைநீர்பெருக்கு காரணமாக செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள்:

i)பெருநகர சென்னை மாநகராட்சி ஊழியர்கள் தி.நகர், பசூல்லா சாலையில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றும் பணியை மேற்கொண்டு வருகிறார்கள். இதன் காரணமாக ஜி.என் செட்டி சாலை-வாணிமஹால் சந்திப்பிலிருந்து பசூல்லா நோக்கி செல்லும் வாகனங்கள் ஜி.என்செட்டி சாலை, ஹபிபுல்லா சாலை வழியாக திருப்பிவிடப்படுகிறது.

மேலும்,சென்னை மாநகர மழைநீர் வடிகால் வாரிய சீரமைப்பு பணியை அண்ணா பிரதான சாலையில் மேற்கொண்டு வருகிறார்கள். இதன் காரணமாக ஜி.எச்.க்கு எதிரே உள்ள அண்ணா பிரதான சாலையில் வடிகால் நீர் அமைக்கும் பணியை எளிதாக்கும் வகையில், உதயம் திரையரங்கம் நோக்கி செல்லும் போக்குவரத்து எதிர் திசையில் அனுமதிக்கப்படுகிறது. இதேபோல் உதயம் சந்திப்பில் காசி முனையிலிருந்து அண்ணா பிரதான சாலை நோக்கி செல்லும் கனரக வாகனங்கள் மட்டும் அசோக் பில்லர் நோக்கி திருப்பி விடப்படுகின்றன”,என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்