சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டம் நிறைவேற்றப்படும் – மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

Default Image

சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டம் நீதிமன்றத்தால் நிறுத்தப்பட்டாலும் விவசாயிகளுடன் ஆலோசித்து நிறைவேற்றப்படும் என்று  மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

சேலம் தேர்தல் பிரசாரத்தில்  மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பங்கேற்று பேசினார்.அப்போது அவர் பேசுகையில்,  சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டம் நீதிமன்றத்தால் நிறுத்தப்பட்டாலும் விவசாயிகளுடன் ஆலோசித்து நிறைவேற்றப்படும்,கோதாவரியில் ஆயிரத்த 200 டிஎம்சி உபரி நீர் வீணாக கடலில் கலக்கிறது.அதனை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு கொண்டு செல்ல 60 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் திட்டம் செயல்படுத்தப்படும். பாஜக ஆட்சி அமைத்தவுடன் இந்த திட்டம் முதலில் தொடங்கப்படும் . இதன் மூலம் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களின் தண்ணீர் பிரச்சனை தீர்க்கப்படும் என்று  மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்