பெரம்பூர் நகைக்கடையில் கொள்ளையடித்தது வெளிமாநில கொள்ளையர்கள் என்பதால் அவர்களை பிடிப்பதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது என சென்னை காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
கடந்த 10ஆம் தேதி சென்னை பெரம்பூரில் உள்ள ஒரு தனியார் நகைக்கடையில் 9 கிலோ தங்க நகைகளையும் 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைர கற்களையும் ஒரு கொள்ளை கும்பல் கொள்ளையடித்து சென்றது. நள்ளிரவில் கடையின் ஷட்டர் பகுதியை வெல்டிங் மிஷின் வைத்து அறுத்து உள்ளே புகுந்து லாக்கரையும் வெல்டிங் வைத்து அறுத்து அதன் உள்ளிருந்த தங்க வைர நகைகளை அந்த கும்பல் கொள்ளை அடித்து இருந்தது.
தனிப்படைகள் : இந்த கொள்ளை கும்பலை பிடிக்க பெரம்பூர் மற்றும் வியாசர்பாடி பகுதி போலீசார் தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். நேற்று கூட கொள்ளையர்கள் பயன்படுத்திய வாகன விவரமானது வெளியாகியது. கொள்ளையர்கள் தப்பிக்க இன்னோவா காரை பயன்படுத்தியது சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவந்தது.
வெளிமாநில கொள்ளையர்கள் : இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தற்போது செய்தியாளர்களிடம் தெரிவிக்கையும், இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது வெளிமாநில கொள்ளையர்கள் என்பதால் அவர்களை பிடிப்பதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது எனவும், ஏற்கனவே 7 தனிப்படை பிரிவு போலீசார் இந்த விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது, கூடுதலாக இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் பயன்படுத்திய வாகன எண் போலியானது என தெரிவித்தார் .
வெளிமாநிலத்தில் விசாரணை : தற்போது உயர் அதிகாரிகள் தங்கள் காவல்துறை குழுவினருடன் வெளிமானத்திற்கு சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த கொள்ளையர்கள் மேலும், சில கடைகளுக்கும் திருட திட்டம் போட்டு இருந்துள்ளனர் என்பதையும் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சென்னை : தேசிய தேர்வு முகமை கடந்த ஆண்டு இறுதியில் ஜனவரி 15, 16 தேதிகளில் மத்திய அரசின் தேசிய தேர்வு…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஏற்கனவே, மத்திய அரசு நிதி சரியாக வழங்கவில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்த நிலையில்,…
சென்னை : நாளை தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.…
சென்னை : தனுஷ் இயக்கி நடித்து வரும் இட்லிகடை திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என கடந்த…
ஜப்பான் : தெற்கு ஜப்பானில் உள்ள கைஷூ பகுதியில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் மக்களை பதட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. 6.8 என்ற ரிக்டர்…
நியூ யார்க : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வரும் ஜனவரி 20ஆம் தேதி பதவி ஏற்க போகிறார். அந்த…