“நாளை முதல் சேவை;இவை கட்டாயம்”- சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு!

சென்னை:மெட்ரோ இரயில் சேவைகள் வழக்கமான அட்டவணையின் படி செயல்படும் என்று மெட்ரோ இரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னையில் மெட்ரோ ரயில் சேவை நாளை முதல் வழக்கமான அட்டவணையின்படி இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
“சென்னை மெட்ரோ இரயில் சேவைகள் ஏற்கனேவே நிர்ணயிக்கப்பட்ட வழக்கமான அட்டவணையின் படி மெட்ரோ பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும் என்று மெட்ரோ இரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மெட்ரோ இரயில் சேவை குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நாளை சனிக்கிழமை (13.11.2021) முதல் வார நாட்களில் (திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை) காலை 5.30 மணி முதல் இரவு 11.00 மணி வரை இயக்கப்படும் மெட்ரோ இரயில் சேவைகள் நெரிசல்மிகு நேரங்களில் காலை 08.00 மணி முதல் 11.00 மணி வரையிலும், மாலை 05.00 மணி முதல் இரவு 08.00 மணி வரையிலும் 5 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.
மெட்ரோ இரயில் சேவைகள் அனைத்து ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் காலை 7:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை 10 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.
கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காகவும் அனைத்து பயணிகளின் பாதுகாப்பான பயணத்திற்காகவும் மெட்ரோ இரயில் நிலையங்களில் நுழைவதற்கும் மெட்ரோ இரயில்களில் பயணிப்பதற்கும் அனைத்து பயணிகளும் கட்டாயம் சரியாக முகக்கவசம் அணிந்திருப்பதுடன் தனிமனித இடைவெளியைக் கடைபிடித்து பயணம் செய்து சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறு மெட்ரோ பயணிகளிடம் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்”,என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025