சென்னை:அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை,செங்கல்பட்டு உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.மேலும்,வங்ககடலில் உருவான மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை,திருவள்ளூர், காஞ்சிபுரம்,செங்கல்பட்டு,விழுப்புரம்,கடலூர்,ராமநாதபுரம் மற்றும் காவிரி டெல்டா உள்ளிட்ட 12 மாவட்டங்களில் அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், சேலம், தருமபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், கடலூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும்,குமரி பகுதி, தென் கடலோர தமிழ்நாடு மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 40-50 கிமீ வேகத்திலும் அவ்வப்போது மணிக்கு 60 கிமீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்த கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் : பாலிவுட் நடிகர் சோனு சூட் எப்போதும் தனது தாராள மனசுக்கு பெயர் பெற்றவர். அவர் பெரும்பாலும் தேவைப்படுபவர்களுக்கு…
சென்னை : இரண்டு நாள் அரசு முறை பயணமாக நெல்லை சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று 2வது நாளாக கள…
சென்னன: நடிகர் அஜித் நடிப்பில் கடசியாக வெளியான துணிவு படத்துக்கு பின், கடந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு மிக பிரம்மாண்ட…
டெல்லி : முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் கடந்த 2015ம் ஆண்டு அக்டோபரில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு…
நெல்லை : இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நெல்லை மாவட்டத்திற்கு சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், அங்கு களஆய்வு மேற்கொண்டு பல்வேறு அரசு…
டெல்லி : நாட்டின் முன்னணி உணவு விநியோக நிறுவனமான ஜொமாட்டோ தனது பெயரை மாற்ற முடிவு செய்துள்ளது. பெயரை மாற்றுவதற்கான…