#Breaking:அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 14 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
சென்னை:அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை,செங்கல்பட்டு உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.மேலும்,வங்ககடலில் உருவான மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை,திருவள்ளூர், காஞ்சிபுரம்,செங்கல்பட்டு,விழுப்புரம்,கடலூர்,ராமநாதபுரம் மற்றும் காவிரி டெல்டா உள்ளிட்ட 12 மாவட்டங்களில் அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், சேலம், தருமபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், கடலூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும்,குமரி பகுதி, தென் கடலோர தமிழ்நாடு மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 40-50 கிமீ வேகத்திலும் அவ்வப்போது மணிக்கு 60 கிமீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்த கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், சேலம், தருமபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், கடலூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. pic.twitter.com/IxoANh1S2e
— TN SDMA (@tnsdma) November 27, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
Zomato நிறுவனத்தின் பெயர் ‘Eternal’ என மாற்றம்! காரணம் என்ன.?
February 7, 2025![Zomato - Eternal](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Zomato-Eternal-1.webp)
கட்சி தொடங்கிய உடனே நான்தான் முதலமைச்சர் என கூறுவது மக்களிடையே எடுபடாது – மு.க.ஸ்டாலின்!
February 6, 2025![DMK mk stalin](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/DMK-mk-stalin-.webp)
எல்லாத்துக்கும் காரணமே அஜித் சார் தான்! விடாமுயற்சி குறித்து உண்மைகளை உடைத்த இயக்குநர்!
February 6, 2025![magil thirumeni about vidaamuyarchi](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/magil-thirumeni-about-vidaamuyarchi.webp)
ஐயோ மீண்டும் மீண்டுமா! சொதப்பிய ரோஹித்…வேதனையில் ரசிகர்கள்!
February 6, 2025![Rohit Sharma](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Rohit-Sharma-.webp)