இன்று மழை பெய்ய வாய்ப்பு… வானிலை மையம் அறிவிப்பு !

Published by
kavitha
தமிழகத்தில் சில இடங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் கன்னியாகுமரி, நெல்லை மற்றும் கோவை மாவட்டங்களில் மழை பெய்தது. இந்தநிலையில் இன்று (சனிக்கிழமை) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்தமான் அருகே வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, நாகை ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும், தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர் ஆகிய 4 மாவட்டங்களில் நாளை (இன்று) ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். இதேபோல், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.

Recent Posts

பஞ்சாப்பை சல்லி சல்லியாக நொறுக்கிய அபிஷேக் சர்மா! ஹைதராபாத் மிரட்டல் வெற்றி!

பஞ்சாப்பை சல்லி சல்லியாக நொறுக்கிய அபிஷேக் சர்மா! ஹைதராபாத் மிரட்டல் வெற்றி!

ஹைதராபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் அதிரடி ஹைதராபாத் அணிக்கு என்ன தான் ஆச்சு என்கிற கேள்விகளை கேட்டவர்கள் அனைவர்க்கும்…

33 minutes ago

பாமக தலைவராக நான் தொடர்ந்து செயல்படுவேன்! அன்புமணி ராமதாஸ் அறிக்கை!

சென்னை :  கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியீட்டு இருந்தார்.…

1 hour ago

குட் பேட் அக்லி மெகா ஹிட்! ‘KGF’ யுனிவர்ஸில் இணையும் ரெட் டிராகன் அஜித்?

சென்னை : அஜித் ரசிகர்கள் பலரும் அவரிடம் எதிர்பார்க்கும் படங்கள் என்றால் மாஸான படங்கள் என்று சொல்லலாம். அப்படி எதிர்பார்த்த ரசிகர்களுக்காகவே…

2 hours ago

அதிரி புதிரி அடி…ஷ்ரேயாஸ் சரவெடி! ஹைதராபாத்துக்கு பஞ்சாப் வைத்த பிரமாண்ட டார்கெட்!

ஹைதராபாத் : நீங்க மட்டும் தான் அதிரடியா பேட்டிங் செய்வீர்களா? என்பது போல ஹைதராபாத் அணிக்கே அதிரடி காட்டும் வகையில்…

2 hours ago

ஸ்டேட்டஸ் போட முடியல…திடீரென முடங்கிய வாட்ஸ்அப்! டென்ஷனான பயனர்கள்!

டெல்லி : உலகம் முழுவதும் உள்ள பல வாட்ஸ்அப் (WhatsApp) பயனர்கள் சேவை தடைபட்டதாக புகார்கள் எழுந்துள்ளது. குறிப்பாக, சிலருக்கு…

3 hours ago

ரூ.27 கோடி வேலை செய்யல…ரிஷப் பண்டை கடுமையாக விமர்சிக்கும் நெட்டிசன்கள்!

லக்னோ : ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர் என்கிற சாதனையை ரிஷப் பண்ட் படைத்திருந்தார். லக்னோ அணி…

4 hours ago