அலர்ட்…!அடுத்த 3 மணி நேரத்திற்கு மிக கனமழை தொடரும் – வானிலை ஆய்வு மையம்!
கடலோர மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிக கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களில் மிக கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மேலும் 3 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும்,சேலம், தருமபுரி, வேலூர், ராணிப்பேட்டை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், ,தேனி, திண்டுக்கல்,மதுரை ஆகிய பகுதிகளிலும் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டிருக்கிறது.
அதேபோல,கன்னியாக்குமரி,நெல்லை,தூத்துக்குடி,தென்காசி மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.