#Alert:தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்!
தமிழகத்தில் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
தமிழகத்தில் கன்னியாகுமரி,திருநெல்வேலி,மேற்கு தொடர்ச்சி மலை, டெல்டா மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
மேலும்,தமிழகம்,புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் இன்று ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து,நாளையும் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும்,புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை நகரம் மற்றும் அதன் சுற்றுப்புறத்திற்கான முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும். அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 35°C மற்றும் 27°C ஆக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
08.04.2022 தேதியிலிருந்து தமிழகத்தின் அடுத்த ஐந்து நாட்களுக்குகான வானிலை முன்னறிவிப்பு pic.twitter.com/W0RaTnE4qS
— TN SDMA (@tnsdma) April 8, 2022