#Breaking: மக்களே அலர்ட்..சென்னையில் இன்று அதிக கனமழை தொடரும் – வானிலை ஆய்வு மையம்!

சென்னை:நான்கு மாவட்டங்களில் இன்று கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி,காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருப்பெற்றதனால்,தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ராணிப்பேட்டை ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று அதிக கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதே சமயம்,செங்கல்பட்டு,வேலூர்,திருவண்ணாமலை,விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும்,நாளை முதல் இரண்டு நாட்களுக்கு நீலகிரி,கோவை, கன்னியாக்குமரியில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 3 இடங்களில் அதிக கனமழையும்,23 இடங்களில் மிக கனமழையும் பெய்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
சோப்பை விளம்பரம் செய்ய ரூ.6.2 கோடி.., கர்நாடக அரசால் தமன்னாவுக்கு வலுக்கும் விமர்சனம்.!
May 22, 2025
LSG vs GT: ஒரே ஆளு.., மரண அடி அடித்த மிட்செல் மார்ஷ்! மிரண்டு போன குஜராத் அணிக்கு இது தான் இலக்கு.!
May 22, 2025