#Breaking:10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் தொடரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை,செங்கல்பட்டு,காஞ்சிபுரம்,விழுப்புரம்,திருவண்ணாமலை, வேலூர், நெல்லை,ராமநாதபுரம், கன்னியாக்குமரி, தூத்துக்குடி ஆகிய 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும்,திருவள்ளூர்,ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கையைப் பொறுத்தவரை,குமரி பகுதி, தென் கடலோர தமிழ்நாடு மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 40-50 கிமீ வேகத்திலும் அவ்வப்போது மணிக்கு 60 கிமீ வேகத்தில் வீசக்கூடும். என்பதால் மேற்குறிப்பிட்ட காலப்பகுதியில் மீனவர்கள் இந்த கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
27-11-2021 – 12.15. குமரி பகுதி, தென் கடலோர தமிழ்நாடு மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 40-50 கிமீ வேகத்திலும் அவ்வப்போது மணிக்கு 60 கிமீ வேகத்தில் வீசக்கூடும். என்பதால் மேற்குறிப்பிட்ட காலப்பகுதியில் மீனவர்கள் இந்த கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். pic.twitter.com/wdy7WZB6pM
— TN SDMA (@tnsdma) November 27, 2021