முதன் முறையாக சென்னை மாமன்றத்தில் ஒலித்த தமிழ்த்தாய் வாழ்த்து பாடல்…
வழக்கமாக திருக்குறள் கூறி ஆரம்பிக்கப்படும் சென்னை மாமன்ற கூட்டத்தொடர் இன்று தமிழ்த்தாய் வாழ்த்து பாடி ஆரம்பிக்கப்பட்டது.
ஒவ்வொரு மாதமும் மாவட்ட , மாநகராட்சிகளில் மாமன்ற கூட்டம் அந்தந்த மாவட்ட மாமன்றத்தில் மேயர் தலைமையில் நடைபெறும். அப்படி, கடந்த முறை சென்னை மாமன்ற கூட்டம் நடைபெற்றது.
திருக்குறள் : அப்போது மதிமுக வார்டு கவுன்சிலர் ஒருவர் ஓர் கோரிக்கை வைத்தார். அதாவது மாமன்ற கூட்டம் தொடங்கும் போது திருக்குறள் மட்டுமே வாசிக்கப்பட்டு ஆரம்பிக்கப்படுகிறது. அதோடு தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடி மாமன்றம் ஆரம்பிக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்து இருந்தார்.
மேயர் உறுதி : அந்த கோரிக்கையினை ஏற்று அடுத்த முறை தமிழ்த்தாய் வாழ்த்து பாடி ஆரம்பிக்கப்படும் என மேயர் கூறியிருந்தார். அதன்படி, இன்று தொடங்கிய மாமன்ற கூட்ட தொடரில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.
தமிழ்த்தாய் வாழ்த்து : அதன் பிறகு சென்னை மேயர் திருக்குறள் வாசித்தார். அதன் பிறகு அவர் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி வாசிக்க அனைவரும் திருப்பி உறுதிமொழியை கூறினர். அதன் பின்னர் சென்னை மாமன்ற கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்பட்டது.