#Breaking:பக்தர்களுக்கும்,தெய்வத்துக்கும் இடையில் இடைத்தரகர்கள் எதற்கு? – உயர்நீதிமன்றம் கேள்வி..!
கோயிலில் இடைத்தரகர்கள் தேவையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
கோயிலில் பக்தர்களுக்கும்,தெய்வத்துக்கும் இடையில் இடைத்தரகர்கள் தேவையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் பக்தர்கள் வலம் வர ஏற்பாடு செய்யக் கோரிய வழக்கில் இத்தகைய கருத்தை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் சாமி தரிசனத்திற்கு ஏற்பாடு செய்வதாக கூறி பேருந்து நிலையத்திலேயே இடைத்தரகர்களால் ரூ.500 வசூலிக்கப்பட்டதாக மனுதாரர் புகார் அளித்திருந்த நிலையில்,ஆண்டவர் முன் அனைவரும் சமம்.எனவே,கோவிலில் பக்தர்களுக்கும்,தெய்வத்துக்கும் இடையில் இடைத்தரகர்கள் தேவையில்லை எனவும் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
மேலும்,மனுதாரரின் குற்றச்சாட்டு குறித்து மனுவாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.