கொரோனா நிவாரணம் வழங்கும் இடங்களில் ஆளுங்கட்சி சின்னம் இடம் பெறக்கூடாது என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த அதிமுக உறுப்பினர் தேவராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.அந்த மனுவில்,”கடந்த ஜனவரி மாதம் முன்னாள் ஆளுங்கட்சியாக இருந்த அதிமுக அரசால் நியாய விலை கடைகளில் பொங்கல் பரிசாக ரூ.2500 ரூபாய் வழங்கிய போது,அதற்கான டோக்கன்களை அரசியல் கட்சியினர் வழங்கக் கூடாது எனவும்,நியாய விலைக் கடைகளில் கட்சி சார்பில் பதாகை வைக்க கூடாது எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை,மீறும் வகையில் தற்போது கொரோனா நிவாரண நிதி 2,000 ரூபாய் வழங்கும் நிகழ்வுகளில் திமுகவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும்,உயர்நீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் நியாயவிலை கடைகளுக்கு அருகே சாலையோரத்தில் திமுகவினர் பேனர்கள் வைத்துள்ளனர்.
எனவே,நியாய விலைக் கடைகள் அருகில் ஆளும் கட்சியினர் விளம்பர பலகை வைக்க தடை விதித்து தமிழக அரசுக்கு,உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்”,எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து,இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி ஆகியோரின் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது,அப்போது,நிவாரான உதவி வழங்கப்படும் ரேஷன் கடைகளில் உதய சூரியன் சின்னம் இடம்பெற்றுள்ளதாகவும், முதல்வரின் புகைப்படம் வைக்கப்பட்டுள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இதற்குப் பதிலளிக்கும் வகையில்,தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் கூறியதாவது,”தேர்தல் அறிவிக்கப்பட இருந்த சமயத்தில் பொங்கல் பரிசு வழங்கப்பட்டதால்,அதில் அரசியல் தலைவர்களின் புகைப்படங்கள் இடம்பெறக் கூடாது எனவும்,பேனர்கள் வைக்க கூடாது எனவும் முன்னதாக வழக்கு தொடரப்பட்டது.ஆனால்,அப்போதைய நிலையும்,தற்போதைய நிலையும் வெவ்வேறாக உள்ளது”,என்று வாதிட்டார்.
இதனைத்தொடர்ந்து,நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,”நிவாரண உதவி வழங்கும் போது,அரசை மட்டுமே முன்னிலைப்படுத்த வேண்டுமே தவிர, ஆளுங்கட்சியை முன்னிலைப்படுத்தக் கூடாது.
மேலும்,மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக முதல்வர் படம் ரேஷன் கடைகளில் இடம் பெறுவது தவறில்லை.ஆனால்,அதில் ஆளுங்கட்சியின் சின்னத்தைதான் பயன்படுத்த கூடாது.
அதுமட்டுமல்லாமல்,நிவாரணம் வழங்கும் நிகழ்வை,அரசியல் நிகழ்ச்சியாக மாற்ற கூடாது.மேலும்,நிவாரண உதவிகள் வழங்கும் போது கொரோனா தடுப்பு விதிகளை கண்டிபாக பின்பற்ற வேண்டும்”,என்று உத்தரவிட்டனர்.
சென்னை : தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. முதலில்…
தென்காசி : கடந்த நவ-20 (புதன்கிழமை) இரவு முழுவதும் இடைவிடாது கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக தென்காசி…
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…