#Breaking:முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு போலீஸ் காவல்..!

Published by
Edison

முன்னாள் அமைச்சர் மணிகண்டனை 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அடையாறு மகளிர் போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

சென்னை அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் துணை நடிகை ஒருவர் கொடுத்த பாலியல் புகாரின் அடிப்படையில்,கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில்,சைதாப்பேட்டை கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவருக்கு சொகுசு வசதிகள் கொடுக்கப்பட்டதாக கூறி,அவரை புழல் சிறைக்கு அதிகாரிகள் மாற்றம் செய்தனர்.

இதனையடுத்து,மணிகண்டனை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அடையாறு மகளிர் போலீசார், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து,சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நீதிபதிகள் முன்பு அமைச்சரை ஆஜர்படுத்தினர்.இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள்,போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க  அனுமதி மறுத்து வழக்கை தள்ளுபடி செய்தனர்.

இதனைத் தொடர்ந்து,முன்னாள் அமைச்சர் மணிகண்டன் விவகாரத்தில் கோபாலபுரத்தை சேர்ந்த மருத்துவரிடம் அடையாறு மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது,மணிகண்டன் அவர்கள் கட்டாயப்படுத்தியதால் நடிகைக்கு கருக்கலைப்பு செய்ததாக மருத்துவர் வாக்குமூலம் அளித்தார். மேலும்,நடிகையின் முகத்தில் காயம் இருந்தபோது இந்த கருக்கலைப்பு அளித்ததாகவும் மருத்துவர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து,நடிகையுடன் ஹோட்டலில் மணிகண்டன் தங்கியிருந்ததற்கான ஆதாரம் சிக்கியது.இதனால்,சம்மந்தப்பட்ட ஹோட்டலுக்கு சென்று விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டதாக தகவல் வெளியாகியது.இதற்கிடையில்,அவரின் 2 செல்போன்கள் சைபர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.மேலும்,நடிகையின் செல்போனையும் போலீசார் சோதனை செய்தனர்.

அப்போது,நடிகைக்கு அனுப்பிய ஆபாச எஸ்எம்எஸ்கள் மற்றும் வீடியோக்களை  மணிகண்டன் உடனுக்குடன் அழித்ததாக முதற்கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.இதனால், மேற்கொண்டு விசாரணை நடத்தும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர்.

இந்நிலையில்,அவரை காவலில் எடுத்து விசாரிக்க அடையாறு மகளிர் போலீசார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.

ஆனால்,ஆட்சி மாற்றத்திற்கு பிறகே மணிகண்டன் புகார் அளிக்கப்பட்டு,கைது செய்யப்பட்டுள்ளதாகவும்,ஏற்கனவே ஒரு நாள் முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டில் இருந்தபோது போலீசார் முழுமையான விசாரணை நடத்தி உள்ளனர்.எனவே,அவர்களின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று அமைச்சர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிபதி,நாளை மற்றும் ஞாயிறு ஆகிய 2 நாட்கள் மணிகண்டனை மதுரை அழைத்து சென்று அவரது மொபைல் போனை கண்டுபிடிக்கவும்,காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசாருக்கு அனுமதி வழங்கியுள்ளனர்.மேலும்,காவலில் விசாரிக்க அனுமதி மறுத்த சைதாப்பேட்டை நீதிமன்ற உத்தரவை ரத்து செய்துள்ளனர்.

Published by
Edison

Recent Posts

கடைசி நேரம் வரை திக் திக்…மும்பையை வீழ்த்தி பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி நேரம் வரை திக் திக்…மும்பையை வீழ்த்தி பெங்களூர் த்ரில் வெற்றி!

மும்பை : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி…

5 hours ago

என்னதான் ஆச்சு? மீண்டும் சொதப்பிய ரோஹித் சர்மா..டென்ஷனில் ரசிகர்கள்!

மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…

6 hours ago

MIvsRCB : படிதார், கோலி அதிரடி! மும்பைக்கு இது தான் இலக்கு!

மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…

7 hours ago

புகழ்ந்து பேசிய அண்ணாமலை..மேடையில் வைத்தே பதிலடி கொடுத்த சீமான்!

சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…

9 hours ago

MIvRCB : அணிக்கு திரும்பிய நம்பிக்கை நட்சத்திரம் பும்ரா…டாஸ் வென்று மும்பை பந்துவீச்சு தேர்வு!

மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…

9 hours ago

“சீமான் அண்ணன், போர்க்களத்தில் இருக்கும் ஒரு தளபதி!” அண்ணாமலை புகழாரம்!

சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…

10 hours ago