சென்னையில் புதிய டாஸ்மாக் கடைக்கு தடை.! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!
சென்னை பெரியமேடு பகுதியில் புதிய டாஸ்மாக் கடை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
சென்னை பெரியமேடு பகுதியில் புதிய டாஸ்மாக் மதுபான கடை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருந்தது. அதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு பதியப்பட்டு இருந்தது.
அதில், கல்லூரி, பள்ளி வளாகங்கள், அரசு அலுவலகங்கள், வழிபாட்டு தளங்கள் என மக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் மதுபான கடைகள் வைக்க கூடாது என்பது விதி என கூறி அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
அந்த கோரிக்கையை ஏற்று, சென்னை, பெரியமேடு பகுதியில் புதிய டாஸ்மாக் கடை திறக்க அனுமதி மறுத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.