3 வது அலையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்தது குறித்து பத்திரிக்கைகளில் வந்த செய்திகளின் அடிப்படையில்,சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி,நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோரின் முதன்மை அமர்வு,பத்திரிக்கைகளில் வந்த செய்திகளை வழக்காக எடுத்துக்கொண்டு தாமாக முன்வந்து அதனை விசாரித்தது.
இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர்கள் ஆஜர் ஆகி வாதிட்டனர். அப்போது,இரண்டாம் அலை காரணமாக தமிழகத்தில் ஏற்பட்டுள்ள ஆக்சிஜன் பற்றாக்குறை,வெண்டிலேட்டர் வசதி,தடுப்பூசி குறித்த சில முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இதனையடுத்து,தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் சண்முக சுந்தரம் ஆஜராகி,”மாநிலத்தில் 1.20 கோடி மக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் காலியாக உள்ளது”, என்று தெரிவித்தார்.பின்னர்,வழக்கு தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில்,இன்று வழக்கை விசாரித்த நீதிபதிகள்,”கொரோனா 3 ஆம் அலை ஏற்படுவதற்கான எந்தவித அறிகுறிகள் இல்லை என்றாலும்,3 வது அலையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை.எனவே, அதை சமாளிப்பதற்காக 2-ம் அலையை எதிர்கொள்ள ஏற்படுத்தப்பட்ட மருத்துவ கட்டமைப்பு வசதிகளை அப்புறப்படுத்த வேண்டாம்.
மேலும்,ஆக்சிஜன் உற்பத்தியை தொடர வேண்டும் என்றும்,மக்களுக்கு தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்”,என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளார்கள்.
ஏலான் மஸ்க் எப்போதுமே தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் எதாவது பதிவு ஒன்றை வெளியிட்டு பயனர்களுடன் கலகலப்பாக பேசுவதை வழக்கமான…
டெல்லி : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. அதானி குழுமம் இந்திய அரசு அதிகாரிகளுக்கு…
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளதால் தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்று கனமழைக்கு…
சென்னை : தமிழ்நாடு துணை முதலமைச்சரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், பிறந்தநாள் வரும் 27-ம்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு மார்ச்-15ம் தேதி தொடங்கி, மே-25ம் தேதி நிறைவடையவுள்ளது. 2 மாதம்…
பெர்த் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை…