ஜெயலலிதாவுக்கு எதிரான செல்வ வரி வழக்கில் வழக்கில் ஜெ.தீபா.ஜெ.தீபக் ஆகியோரை சேர்த்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழக முதல்வராக இருந்த மறைந்த ஜெயலலிதா அவர்கள்,கடந்த 2008,2009 ஆம் ஆண்டு செல்வ வரி கணக்கை செலுத்தவில்லை என்று வருமான வரித்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.இதனை எதிர்த்து ஜெயலலிதா அவர்கள் வழக்கு தொடர்ந்த நிலையில்,செல்வ வரி வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.
இதனையடுத்து,செல்வ வரி வழக்கில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதவை விடுவித்ததை எதிர்த்து வருமான வரித்துறை அதிகாரிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர்.இதனிடையே,கடந்த 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா அவர்கள் மரணமடைந்தார்.
இதனையடுத்து,வேதா இல்லம் தொடர்பான வழக்கில் ஜெ.தீபா.ஜெ.தீபக் வாரிசுகளாக அறிவிக்கப்பட்ட நிலையில்,தற்போது அவர்களை ஜெயலலிதாவுக்கு பதிலாக செல்வ வரி வழக்கில் சேர்க்க வேண்டும் என்று வருமான வரித்துறையினர் மனுதாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில்,கடந்த 10 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வருமான வரித்துறையினர் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில்,ஜெயலலிதாவுக்கு எதிரான செல்வ வரி வழக்கில் வழக்கில் ஜெ.தீபா.ஜெ.தீபக் ஆகியோரை சேர்த்து சென்னை உயர்நீதிமன்றம் இத்தகைய உத்தரவை பிறப்பித்துள்ளது.
மேலும்,வழக்கு தொடர்பான ஆவணங்களை தீபா,தீபக் ஆகியோருக்கு வருமான வரித்துறையினர் வழங்க வேண்டும் என்று கூறி அடுத்த கட்ட விசாரணையை ஏப்ரல் முதல் வாரத்திற்கு உயர்நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…
திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…
மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…
சென்னை : இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுதுவம் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய தினங்கள்…
சென்னை :கரும்புச்சாறை வைத்து பொங்கல் ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்: பச்சரிசி…
சென்னை: துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின்…