முதல்வர் உள்பட திமுக எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை ஐகோர்ட்!
தமிழ்நாடு பேரவைக்குள் குட்கா உள்ளிட்ட பொருட்களை கொண்டு வந்ததாக அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி.
2017 ஆம் ஆண்டு சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு வந்த வழக்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எதிரான மனு தள்ளுபடி செய்யப்பட்டது. சட்ட பேரவைக்குள் குட்கா கொண்டு வந்ததாக திமுக தலைவர் முக ஸ்டாலின், எம்எல்ஏக்கள் மீதான வழக்கை தொடர விரும்பவில்லை என பேரவை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கை தொடர விரும்பவில்லை என சட்டப்பேரவை செயலாளர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கமளிக்கப்பட்டது.
சட்டப்பேரவை செயலாளர் விளக்கத்தை ஏற்று மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். அதன்படி, முதல்வர் ஸ்டாலின் உள்பட திமுக எம்எல்ஏக்களுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. அதாவது, திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக பேரவை செயலாளர், உரிமைக்குழு தரப்பில் தொடர்ந்து மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.
உரிமைக்குழு நோட்டீஸுக்கு தடை விதித்து தனி நீதிபதி அளித்த தீர்ப்பை எதிர்த்து 2021-ல் மேல்முறையீடு செய்யப்பட்டது. உரிமைக்குழு நோட்டீசை எதிர்த்து ஸ்டாலின் உள்ளிட்டோர் தொடர்ந்த மனுவை ஏற்று அதை ரத்து செய்தது ஐகோர்ட். இதனை எதிர்த்து, பேரவை செயலாளர், உரிமைக்குழு மேல்முறையீடு செய்திருந்தது. இந்த நிலையில், மேல்முறையீட்டு வழக்கை திரும்ப பெறுவதாக உயர்நீதிமன்றத்தில் பேரவை செயலாளர் தரப்பு அறிவித்தது. இதனால் வழக்கு தள்ளுபடியானது.